பலர் நினைப்பது போல் நான் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவில்லை- கும்பமேளா அழகி மோனலிசா
மோனலிசா 'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.;
உத்தரபிரதேசத்தில் நடந்த மகாகும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. தனது காந்த விழி கண்களால் இந்திய அளவில் பிரபலமான மோனலிசாவின் வாழ்க்கை ஒரே நாளில் முற்றிலும் மாறிவிட்டது. சமூக வலைதளங்களின் அனைத்து பக்கங்களிலும் மோனலிசா தோற்றம் டிரெண்டிங்கானது.
இதைத் தொடர்ந்து 'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஓ.டி.டி. நிறுவனங்கள் வெப் தொடரில் அவரை நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மோனலிசாவின் வருமானம் கோடிக் கணக்கில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அவர் கூறுகையில், மகா கும்பமேளாவில் இருந்தும், தாய் கங்கம்மா அருளினாலும் எனக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறது. பலர் நினைப்பது போல் நான் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.