8-9 வருடங்களாக படம் கிடைக்காமல் கஷ்டப்பட்ட இயக்குனர் - வாய்ப்பு கொடுத்த அருண் விஜய்

ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.;

Update:2025-08-10 08:48 IST

சென்னை,

''ரெட்ட தல'' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் திருக்குமரன், நீண்ட காலமாக தனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். அவர் கூறுகையில்,

"மான் கராத்தே (2014) மற்றும் கெத்து (2016) படங்களுக்கு பிறகு, 8-9 ஆண்டுகளாக எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அப்போது அருண் விஜய் சாரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அவரிடம் 'என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது, அதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்' என்றேன். கதையைக் கேட்ட உடனேயே அவர் ஓகே சொல்லிவிட்டார்" என்றார்.

ரெட்ட தல படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.  சித்தி இத்னானி, யோகி சாமி, தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2019-ம் ஆண்டு வெளியான தடம் படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்