'உங்களுக்காக சின்ன வயசுல சண்டை போட்டுள்ளேன்'- ரசிகர் பேச்சால் வியந்த அஜித்
அஜித்தா?, விஜய்யா? என்ற சண்டை, போட்டி வரும்போதெல்லாம், உங்கள் பக்கம் தான் நின்றுள்ளேன் என அஜித்தின் ரசிகர் கூறினார்.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. அஜித்குமார் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜி.டி.-4 கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் போட்டிக்கிடையில் ரசிகர் ஒருவர் அவரை சந்தித்தார்.
'உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்' என்று கேட்க, அஜித்குமாரும், 'சரி, சொல்லுங்கள்' என்றார். அப்போது அஜித்குமாரிடம், 'நான் உங்கள் தீவிர ரசிகன். சின்ன வயதில் உங்களுக்காக சண்டையெல்லாம் போட்டிருக்கிறேன்.
அஜித்தா?, விஜய்யா? என்ற சண்டை, போட்டி வரும்போதெல்லாம், உங்கள் பக்கம் தான் நின்றுள்ளேன். 'என் ஏரியாவில் பெரிய ரசிகர் படையும் இருக்கிறது' என்றார். ரசிகரின் பேச்சால் அஜித்குமார் வியந்துபோனார். மகிழ்ச்சியுடன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அந்த ரசிகரை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.