அந்த காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்தேன் - மமிதா பைஜு
மமிதா பைஜு நடித்துள்ள டியூட் படம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
டியூட் படத்தின் புரமோஷனில் நடிகை மமிதா பைஜு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நேற்று நடைபெற்ற பட விழாவில் பேசிய அவர், ஒரு காட்சிக்காக இரவு முழுவதும் பயிற்சி செய்ததாக கூறினார்.
"டியூட்' படத்தில் சில உணர்ச்சி வாய்ந்த காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளுக்கான வசனங்களை இரவு முழுவதும் பயிற்சி செய்தேன். அது சவாலாகவும் உற்சாகமாகவும் இருந்தது" என்று மமிதா பைஜு கூறினார்
'டியூட் படத்தில் பிரதீப் ரங்கதாதன் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மைத்ரி மூவி சார்பில் நவீன் பெர்சேனி மற்றும் ஒய் ஷங்கர் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.