விடுப்புக்காக இடுப்பை காட்டினேன்... நடிகை பகிர்ந்த அனுபவம்; ரசிகர்கள் அதிர்ச்சி
கேத்தரீனோ, நிச்சயம் உன்னால் முடியும் என கூறி பாஸ் என் ஆவலை தூண்டினார் என்றார்.;
கோப்புப்படம்
நியூயார்க்,
நகைச்சுவை நடிகை, பாடகி, பாடலாசிரியர், நடிகை என பன்முக தன்மை கொண்டவர் கேத்தரீன் ரியான் (வயது 42). கடந்த செவ்வாய் கிழமை பத்திரிகையாளரான லூயிஸ் தெராக்ஸ் (வயது 55) என்பவருக்கு அளித்த நேர்காணலின்போது, அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்றை கூறினார்.
கேத்தரீன் 25 வயதில் இருக்கும்போது, அவர் பணிபுரிந்த இடத்தின் முதலாளியிடம் படுக்கையை பகிர்ந்தது பற்றி லூயிஸ் அறிந்திருக்கிறார். இதுபற்றிய கேள்வி ஒன்றை எழுப்பினார். அதனை உறுதி செய்த கேத்தரீன், அதற்கான பதிலை கூறினார். அப்போது அவர் வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டிய கட்டாயம் இருந்தது.
இதற்காக அவருடைய முதலாளியை அணுகிய கேத்தரீன், பாஸ், உங்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால், என்னை வீட்டுக்கு சீக்கிரம் விட்டு விடுவீர்களா? என கேட்டேன்.
இந்த இடத்தில் அதிர்ச்சியடைந்த லூயிஸ், உடனே மறித்து, நீங்கள் அப்படி கூறினீர்களா? என கேட்டார். ஆம், கூறினேன். நான் அவரை விரும்பினேன். அதுவே முக்கிய விசயம். யாரோ சிலர் போன்று அவர் கிடையாது என பதிலாக கேத்தரீன் கூறினார்.
இதற்கு பாஸ் என்ன கூறினார்? என லூயிஸ் ஆவலாக கேட்டார். அதற்கு கேத்தரீனோ, நிச்சயம் உன்னால் முடியும் என கூறி பாஸ் என் ஆவலை தூண்டினார். இதன்பின்னர், அவருடன் படுக்கையை பகிர்ந்து, சீக்கிரம் வீட்டுக்கு புறப்பட்டேன் என கூறினார். அந்த அலுவலகத்தில் பணியாற்றிய பல பெண்கள், இதே அணுகுமுறையை கொண்டிருந்தனர் என மற்றொரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டார்.
இந்த முறை லூயிஸ் கூறும்போது, வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டும் என விரும்பும், ஆனால், பாஸுடன் படுக்கையை பகிர விருப்பமில்லாத பெண்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கும் இல்லையா? என்றார்.
அதற்கு கேத்தரீன் இந்த யோசனையை பாஸ் ஒருபோதும் முன் வைக்கவில்லை என்றார். உடனே லூயிஸ், இப்போதும் இதே எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது பாஸ் முற்றிலும் முறையற்ற வகையில் நடந்து கொண்டார் என கூறுவீர்களா? என கேட்டார்.
கேத்தரீனோ, உண்மையில் நான் அவரை விரும்பினேன். அவர் மீது ஈர்ப்பு இருந்தது. அதனாலேயே... என பதிலாக கூறி முடித்து விட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பதிவுக்கு தொடர்ந்து அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தன. அவர் கூறிய இந்த பதிலுக்காக நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக சாடினர்.
அவருடைய இளமை பருவத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றி அவர் வெளிப்படுத்திய விசயங்களுக்காக கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், கலாசாரம் விரைவாக முன்னேறி கொண்டிருக்கிறது என கேத்தரீன் கூறினார். எனினும், கேத்தரீனுக்கு ஆதரவாகவும் சிலர் விமர்சனங்களை பதிவிட்டனர். அவர் விரும்பியிருக்கிறார். அதற்கேற்ப அவர் அப்படி நடந்து கொண்டிருக்கிறார். அது அவர் சார்ந்த விசயம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.