"அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை'' - சண்முக பாண்டியன்

சண்முக பாண்டியன் தற்போது 'படைத்தலைவன்' படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-12-21 08:09 IST

சென்னை,

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக 'சகாப்தம்' வெளியானது. பின்னர் 'மதுரை வீரன்' என்ற படத்தில் நடித்தார்.

தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்துள்ளார். டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்கியுள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 19-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் பேசிய சண்முக பாண்டியன், தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். அவர் பேசுகையில், "அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. அதனை படமாக எடுப்பதற்கு சரியான இயக்குநர் கிடைக்க வேண்டும். அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை சுலபமாக படமாக்க முடியாது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்