ரிலீஸ் தேதி அறிவிப்பு...ஷேன் நிகாமின் ’ஹால்’ எப்போது திரைக்கு வருகிறது தெரியுமா?

ஹாலில், சாக்சி வைத்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார்;

Update:2025-12-21 09:38 IST

சென்னை,

மலையாளத் திரைப்படமான 'ஹால்' விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ’பல்டி’ பட நடிகர் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம், வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இது மோகன்லால் நடித்த விருஷபா படத்துடன் மோதுகிறது. மேலும், நிவின் பாலி நடித்த 'சர்வம் மாயா', உன்னி முகுந்தன் மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்த 'மிண்டியம் பரஞ்சும்' படங்களும் அதே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாலில், சாக்சி வைத்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார், நிஷாந்த் சாகர், ஜாய் மேத்யூ, ஜானி அந்தோணி மற்றும் மதுபால் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் வீரா இயக்கியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்