ரக்சனின் ’மொய் விருந்து’ படப்பிடிப்பு நிறைவு
இதில் ஆயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.;
சென்னை,
எஸ்கே பிலிம்ஸ் சார்பில் கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சி.ஆர். மணிகண்டன் இயக்கும் புதிய படம் மொய் விருந்து. இப்படத்தில் கதாநாயகனாக ரக்சன் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.