'பிக்பாஸ் போய்ட்டு வந்தால் எதுவும் நடக்காது...படம் எடுத்தால் பணம் திரும்ப வராது' - கூல் சுரேஷ் பரபரப்பு பேச்சு
பிக்பாஸில் இருந்து வந்தால் எதுவும் நடக்காது என்று நடிகர் கூல் சுரேஷ் கூறினார்.;
சென்னை,
பிக்பாஸில் இருந்து வந்தால் எதுவும் நடக்காது என்று நடிகர் கூல் சுரேஷ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று 'ஆழி' மியூசிக் ஆல்பத்தின் குழு செய்தியாளர்களை சந்தித்தது. இதில் சிறப்பு விருந்தினராக கூல் சுரேஷ் கலந்துகொண்டார் அப்போது பேசிய அவர்,
'பிக் பாஸ் போய்ட்டு வந்தால் நல்லது எல்லாம் ஒன்றும் நடக்காது. இதுவரை 8 சீசன்கள் முடிந்திருக்கிறது. அதில் வென்றவர்களாக இருக்கட்டும் அல்லது தோல்வியடைந்தவர்களாக இருக்கட்டும் யாராவது வெளியே தெரிந்தார்களா இல்லை.
வெளியே தெரிய வேண்டும் என்றால் இயக்குனராலும், தயாரிப்பாளராலும்தான் முடியும். நீங்கள் நினைக்கலாம், இவரும் அங்கே போய்ட்டு வந்தவர்தானே என்று, ஆனால், நான் 100 நாள் வேலை திட்டத்திற்குதான் போனேன்.
நான் வேலை இல்லாமல் இருந்தேன், வேலைக்கு கூப்பிட்டார்கள் போனேன். அதுதான் நான் பண்ணது. நான் பிக்பாஸை குறை கூறலாம் நினைக்கவில்லை. ஆனால், அங்கு சென்று வந்தால் அதற்கான அங்கீகாரம் எல்லாம் ஒன்றும் கிடைக்காது.
எல்லா இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் ஒன்று சொல்கிறேன். என்னை திட்டினாலும் சரி. பிக்பாஸ் போய்ட்டு வந்தவர்களை படத்தில் சேர்த்தால் நீங்கள் ரூ.1000 பணம் போட்டாலும் சரி ரூ.1000 கோடி பணம் போட்டாலும் சரி அது திரும்ப வராது' என்றார்.