சூரியின் "மாமன்" பட வசூல் இத்தனை கோடியா?

குடும்பக் கதைக்களத்தில் உருவான ‘மாமன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2025-06-15 08:19 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

சூரி நடிப்பில் பிரசாந்த் பண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். அக்காவாக சுவாசிகா நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சூரி 'மாமன்' படத்தின் 30வது நாளையொட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டி பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் 32 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்