கார்த்தியின் "மார்ஷல்" பட வில்லன் இவரா..?

கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் கார்த்தி நடிக்க உள்ளார்.;

Update:2025-08-20 12:37 IST

சென்னை,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு "மார்ஷல்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். பிரபல தெலுங்கு நடிகரான நானி கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதற்கிடையில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் நிவின் பாலி நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதையடுத்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது நடிகர் ஜீவா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்