அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருந்தது - நடிகை நிமிஷா சஜயன்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நிமிஷா சஜயன் நடித்துள்ள 'டி.என்.ஏ' படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன். 2019-ம் ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவர் தமிழில் 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'மிஷன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 'டி.என்.ஏ' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக அதர்வா நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நடைபெற்றது. அதில் பேசிய நடிகை நிமிஷா சஜயன் இந்த படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதாவது, "டி.என்.ஏ படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். இந்த படத்தில் நடிக்க என் மீது நம்பிக்கை வைத்த நெல்சன் சார்-க்கு நன்றி. இந்த படத்தில் 'திவ்யா' கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு கொஞ்சம் சவாலாக இருந்தது. ஜூன் 20-ந் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் படத்தை தவறாமல் பார்க்க வேண்டும். இந்த படம் எல்லாருக்கும் எமோஷனலாக கனெக்ட் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.