’கெரியரில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்த படம் அது’ - தமன்னா
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தமன்னா பாகுபலி படம் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.;
சென்னை,
ராஜமவுலியின் பாகுபலி படங்கள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. இதன் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார். பிரபாஸ் மற்றும் ரானா முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படங்களில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார்.
தற்போது இந்த இரண்டு படங்களும் ஒன்றாக பாகுபலி தி எபிக் என்ற பெயரில் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தமன்னர் பாகுபலி படம் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தப் படம் தனது தன்னம்பிக்கையை அதிகரித்ததாக அவர் கூறினார்.
அவர் கூறுகையில், பாகுபலி படம்தான் கெரியரில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்த படம். இந்த படங்களில் நடித்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
மக்கள் கருத்துக்களை நான் தீவிரமாக எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டேன். இது என் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. என்னையே அதிகமாக நம்ப ஆரம்பித்தேன் ’ என்றார்.