''மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு'' - இயக்குனர் பிரேம் குமார்

மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு என பலர் கூறியதாக இயக்குனர் பிரேம் குமார் கூறி இருக்கிறார்;

Update:2025-09-24 18:05 IST

சென்னை,

'96' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சி பிரேம் குமார், கடந்த ஆண்டு ''மெய்யழகன்'' படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், ஓடிடியில் வெளியான பின் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு என பலர் கூறியதாக பிரேம் குமார் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,

''மெய்யழகன் படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள், தமிழில் எடுத்ததுதான் தவறு என என்னிடம் பல பேர் கூறினார்கள். இருந்தாலும் ஓடிடியில் எனக்கு பாராட்டுகள் கிடைத்துவிட்டது.

பைரசியை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக ரிவ்யூவர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியான பிரச்சினை இருக்கிறது, இதைச் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்