மனதில் உள்ளதை மறைக்காமல் பேசிவிடுவதே நல்லது- தங்கலான் பட நடிகை

பார்வதி திருவோத்து அடிக்கடி பரபரப்பு கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம்.;

Update:2025-11-04 07:06 IST

சென்னை,

‘பூ', ‘மரியான்', ‘சென்னையில் ஒருநாள்', ‘தங்கலான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர், மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பார்வதி திருவோத்து அடிக்கடி பரபரப்பு கருத்துகள் கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். இதுகுறித்து அவர் மனம் திறந்து கூறும்போது, ‘‘வாழ்க்கையில் எதுவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதற்காக உள்ளதை மறைத்து வாழ்வதில் பிரயோஜனம் இல்லை.

என்னை பொறுத்தவரை என் மனதில் என்ன உள்ளதோ, அதை மறைக்காமல் பேசிவிடுவேன். அதுதான் நல்லது. நல்லவராக காட்டிக்கொள்வதைவிட, நடிக்காமல் இருப்பது எவ்வளவோ மேல். அந்த போலி முகமூடி எனக்கு தேவையில்லை'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்