'ஜெயிலர் 2' - வித்யா பாலன் இந்த நடிகரின் மகளாக நடிக்கிறாரா?
இந்த படத்தில் நடிகை வித்யா பாலன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிகை வித்யா பாலன் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டநிலையில், தற்போது அவரது கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
மிதுன் சக்ரவர்த்தி இதில் வில்லனாக நடிப்பதாகவும், அவரின் மகளாக வித்யா பாலன் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.