ஜான்வி கபூருக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள காரை பரிசளித்த பிரபலம்
ஜான்வி கபூர் தற்போது 'சன்னி சங்கரி கி துளசி குமாரி', 'பரம் சுந்தரி' மற்றும் ’பெத்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.;
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படங்கள் 'தேவரா: பாகம் 1' மற்றும் 'உலாஜ்' . தற்போது இவர் 'சன்னி சங்கரி கி துளசி குமாரி', 'பரம் சுந்தரி', 'பெத்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல பாடகி அனன்யா பிர்லா ரூ.5 கோடி மதிப்புள்ள ஸ்வான்கி பர்பிள் லம்போர்கினியை ஜான்வி கபூருக்கு பரிசளித்திருக்கிறார்.
தொழில் அதிபர்களான குமார் மங்கலம் மற்றும் நீர்ஜா பிர்லாவின் மகள் அனன்யா. இவரும் ஜான்வி கபூரும் பல ஆண்டுகளாக தோழிகளாக இருந்து வருகின்றனர்.
அனன்யா கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம் பீன்ஸ் தயாரித்த 'லிவின் தி லைப்' பாடல் மூலம் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.