தஹி ஹண்டி விழா....ஜான்வி கபூரை சூழ்ந்த ரசிகர்கள்.. வீடியோ வைரல்

மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த தஹி ஹண்டி விழாவில் ஜான்வி கபூர் உற்சாகமாக பங்கேற்றார்.;

Update:2025-08-18 06:43 IST

சென்னை,

தான் நடித்துள்ள ''பரம் சுந்தரி'' திரைப்பட புரமோஷனில் பிசியாக உள்ள பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த தஹி ஹண்டி விழாவில் உற்சாகமாக பங்கேற்றார். அவ்விழாவில் தயிர் பானையை உடைத்து ஜான்வி கபூர் மகிழ்ந்த நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்படுபோது ரசிகர்களின் கூட்டம் அவரை சூழ்ந்தது. இதனால் அங்கு சில வினாடி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்புப் பணியாளர்களால் அவர் காரில் அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

ஜான்வி கபூர் தற்போது ''பரம் சுந்தரி'' படத்தில் நடித்துள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம், டெல்லியை சேர்ந்த ஒரு ஆணுக்கும் தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்டுள்ளது.

தினேஷ் விஜனின் மோடாக் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூரும் பரம் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த்தும் நடித்துள்ளனர்.

'தேவரா' திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜான்வி கபூர் தற்பொழுது மீண்டும் தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 29-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்