நடிகர் சயிப் அலிகானின் மகன் அறிமுகமாகும் படத்தில் ஜான்வி கபூரின் சகோதரி
நடிகர் சயிப் அலி கானின் மகன் இப்ராகிம் அலி கான் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.;
சென்னை,
ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகிவிட்டார், மேலும் அவரது மகன் ஆர்யன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
அதேபோல், அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, நடிகர் சயிப் அலி கானின் மகன் இப்ராகிம் அலி கான் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.
அதன்படி, கரண் ஜோஹர் தயாரிக்கும் "நாடானியன்" என்ற படத்தின் மூலம் இப்ராகிம் அலி கான் அறிமுகமாகிறார். "நாடானியன்" படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், நடிகை ஜான்வி கபூரின் சகோதரி குஷி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் 2023-ல் வெளியாக "தி ஆர்ச்சீஸ்" திரைப்படத்தில் அறிமுகமானார்.
குஷி கபூரும், அமீர் கானின் மகன் ஜுனைத் கானும் நடித்துள்ள "லவ்யப்பா" படம் வருகிற 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்ராகிம் அலி கானுடம் குஷி கபூர் நடிக்க உள்ளது அவரது மூன்றாவது படமாகும்.