ஜான்விகாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது - நடிகர் உதயா

அக்யூஸ்ட் படத்தில் நடிகை ஜான்விகா கதாநாயகியாக நடித்துள்ளார்.;

Update:2025-07-19 17:04 IST

சென்னை,

பிரபுஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அக்யூஸ்ட். இதில் கதாநாயகனாக உதயா, கதாநாயகியாக ஜான்விகா நடித்துள்ளனர். மேலும் அஜ்மல், யோகி பாபு, டி.சிவா உள்பட பலர் நடித்து உள்ளனர். நரேன்பாலகுமார் இசை அமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி படம் திரைக்கு வர உள்ளது.

இதையொட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயா பேசியதாவது, 3 வருடங்களாக நிறைய அழுத்தங்களில் இருந்தேன். மீண்டும் சினிமாவில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தில் இறங்கி இருக்கிறேன். தமிழ் சினிபாவை பொருத்தவரை கதை ரொம்ப முக்கியம் நான் எந்த படம் வந்தாலும் தியேட்டரில் போய் பார்க்கிற ரசிகன்.

தமிழ் சினிமாவுக்கு ஏற்ற கதாநாயகி ஜான்விகா. கேரவன் மற்றும் எந்த சொகுசு வசதிகளையும் கேட்க மாட்டார், ரொம்பவும் எளிமையாக இருப்பார். ஜான்விகாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்த படத்தில் சண்டைக் காட்சி ஒன்றுக்காக ஒன்றரை கோடி செலவில் பஸ் ஒன்றை வாங்கி படமாக்கி இருக்கிறோம். கண்டிப்பாக எல்லோரையும் ரசிக்க வைக்கும் படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்