குழந்தையின் பிறப்பு சான்றிதழை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டா தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவுத்தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார். ஜாய் கிரிசில்டா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டிருந்த நிலையில், அதில்,"கார்பன்காபி ஆப் ஹிஸ் பார்தர் பேஸ்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அப்பாவின் முக ஜாடையை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகனின் பிறப்புச் சான்றிதழை வெளியிட்டுள்ளார். தந்தை பெயர் மாதம்பட்டி ரங்கராஜ் என குறிப்பிட்டுள்ளார். மேலும், “சில பொறுப்புகள் வலிக்காக வழங்கப்படுகின்றன. பெருமைக்காக அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.