ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

ஜூனியர் என்.டி.ஆர் - கே.ஜி.எப் இயக்குநர் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.;

Update:2025-02-20 16:25 IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் 'வார் 2' படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் கடைசியாக இயக்கிய 'சலார் 1' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. விரைவில், இதன் இரண்டாம் பாகம் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய திரைப்படத்தை பிரசாந்த் இயக்கும் அறிவிப்பு வெளியானது. இப்படம் 2026ம் ஆண்டு திரைக்கு வருமென்பதையும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக இன்று துவங்கியுள்ளது. முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து வருகின்றனர்.ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்