காயம் இருந்தபோதிலும் ரிஷப் ஷெட்டிக்காக அதை செய்த ஜூனியர் என்.டி.ஆர்
ஒரு விளம்பரப் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி.ஆர் காயமடைந்தார்.;
ஐதராபாத்,
சில நாட்களுக்கு முன்பு, ஒரு விளம்பரப் படப்பிடிப்பின் போது ஜூனியர் என்.டி.ஆர் காயமடைந்தார். இருப்பினும், அவரது குழுவினர் ஆபத்து இல்லை என்று கூறினர். இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அதன் பிறகு, அதிகம் வெளியே வராத ஜூனியர் என்.டி.ஆர், இப்போது 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்காக வெளியே வந்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் அவர் பங்கேற்றார். காயம் இருந்தபோதிலும் ரிஷப் ஷெட்டிக்காக ஜூனியர் என்.டி.ஆர் இவ்விழாவில் கலந்துகொண்டார்.
காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ''காந்தாரா - சாப்டர் 1’ என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மனி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.