கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் 2025...முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா:சாப்டர் 1 இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.;

Update:2025-12-14 04:15 IST

சென்னை,

2025 ஆம் ஆண்டில், பாலிவுட் படங்கள் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. காதல் படமான சையாரா இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படமாக உருவெடுத்துள்ளது. ரிஷப் ஷெட்டியின் காந்தாரா:சாப்டர் 1 இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ் படங்களில், ரஜினியின் கூலி மட்டுமே டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது. லோகேஷ் இயக்கி, ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது. தொடர்ந்து, ஜூனியர் என்டிஆரின் முதல் இந்தி படமான வார் 2வும் இடம்பெற்றுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் 2025:-

1.சையாரா

2.காந்தாரா: சாப்டர்-1

3.கூலி 

4.வார் 2

5.சனம் தேரி கசம்

6.மார்கோ 

7.ஹவுஸ்புல் 5

8.கேம் சேஞ்சர்

9.மிஸஸ்

10.மகாவதார் நரசிம்மா

Tags:    

மேலும் செய்திகள்