அனஸ்வராவின் அடுத்த படம்...தயாரிப்பாளராக மாறிய பிரபல இயக்குனர்

இப்படத்தின் மூலம் அவர் தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார்.;

Update:2025-12-13 23:40 IST

சென்னை,

இயக்குனர் வெங்கி குடுமுலா தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். அவர் தற்போது புதிதாகத் தொடங்கப்பட்ட தனது வாட் நெக்ஸ்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் ஒரு புதிய படத்தின் மூலம் தயாரிப்பில் களம் இறங்குகிறார்.

மலையாளத்தில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவரான அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்

படத்தின் கதாநாயகன் யார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. ஆனால் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், படத்தின் தலைப்பு நாளை வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்