'வடம்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் சசிகுமார்

இதில் அறிமுக நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார்.;

Update:2025-12-13 22:40 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் "வடம்" என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சசிகுமார் நாளை காலை 11.11 மணிக்கு வெளியிடுகிறார். படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்