சிரஞ்சீவி - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் கேத்தரின் தெரசா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.;
சென்னை,
அடுத்தாண்டு பொங்கல் சீசன் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறி வருகிறது. தற்போது சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள "மன சங்கர வர பிரசாத் கரு" படத்தின் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் வெங்கடேஷ், கேத்தரின் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார்.
அனில் ரவிபுடி இயக்கிய “மன சங்கர பிரசாத் கரு” படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் சாஹு கராபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.