’யாரும் அதை எதிர்பார்க்கவில்லை....மிகவும் வருத்தமாக இருந்தது’ - விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு, ‘டாணாக்காரன்' , 'லவ் மேரேஜ்' திரைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.;

Update:2025-12-14 03:45 IST

சென்னை,

விக்ரம் பிரபு தற்போது சிறை திரைப்படத்தில் நடித்துள்ளார் . இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், ஒரு நேர்காணலில் பேசிய விக்ரம் பிரபு, தனது முந்தைய படங்களான ‘டாணாக்காரன்' , 'லவ் மேரேஜ்' திரைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், ’‘டாணாக்காரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாதது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கோவிட் வந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. யாரும் அதை எதிர்பார்க்கவில்லை.

'லவ் மேரேஜ்' திரைப்படம் கோவிட் காலகட்டத்திற்கு ஏற்ப படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த 3 மாதங்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது 1.5 ஆண்டுகள் தாமதமானது. எப்படியிருந்தாலும், அந்தப் படம் வரவேற்பை பெற்றது.  ஆனால் முன்னதாகவே வெளியாகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ‘ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்