ராஷ்மிகாவின் 'மைசா'வில் இணைந்த 'கல்கி 2898 ஏடி' ஸ்டண்ட் மாஸ்டர்?

ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்கிறார்;

Update:2025-10-29 09:03 IST

சென்னை,

ராஷ்மிகா மந்தனாவின் பான்-இந்திய படங்களில் மைசாவும் ஒன்று. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தம்மா' நல்ல வசூலை ஈட்டி வருகிறது. மேலும் அவரது அடுத்த படமான 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் புரமோஷன் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஆண்டி லாங் நுயென், ராஷ்மிகாவின் மைசா படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்