இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

இயக்குனர் மணிரத்னம் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.;

Update:2025-06-02 12:34 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் 1983ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கினார். இவர் "பகல் நிலவு, மவுனராகம், நாயகன், தளபதி, அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டாள், அக்னி நட்சத்திரம், இருவர், பொன்னியின் செல்வன்" என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார்.

இவர் தற்போது 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து 'தக் லைப்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற 5-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் மணிரத்னம் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "நாயகன் முதல் தக் லைப் வரை குடும்பம், கனவு கான்பவர்கள் என்பதையும் தாண்டி சினிமாவின் மாணவர்களாக ஒன்றாக பயணித்துள்ளோம். உங்களின் துணை எனக்கு பலம் கொடுத்துள்ளது. உங்களின் கதைகள் தொடரட்டும். உங்களின் ஒவ்வொரு ப்ரேமும் அழகையும், சினிமாவுக்கான அர்த்தத்தையும் கொடுக்கட்டும். என்றென்றும் உங்கள் நண்பர், கமல்ஹாசன்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்