மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினிகாந்த் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-04-17 09:49 IST

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வரும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களாக கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த வகையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்கு கதை சொல்லி உள்ளதாகவும், அது ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் விரைவில் படத்திற்கான வேலை தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2019-ம் ஆண்டில் 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ரஜினியுடன் கார்த்திக் சுப்பராஜ் கைகோர்க்கும் இந்த புதிய படம் பேட்ட 2 வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்