கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த ‘ஆர்யன்’ படத்தின் அறிவிப்பு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆர்யன்’ படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருந்தது.