சொகுசு வீடு வாங்கிய கிருத்தி சனோன்.. இத்தனை கோடியா?
கிருதி சனோன் மும்பையின் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான பாந்திரா பாலி ஹில்லில் கடற்கரை அருகே சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.;
மும்பை,
பாலிவுட் திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி சனோன். தனுஷ் உடன் தேரே இஷ்க்மெய்ன் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்ற கிருத்தி சனோன் மும்பையின் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான பாந்திரா பாலி ஹில்லில் கடற்கரை அருகே சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.
இதன் மதிப்பு ரூ 78. 20 கோடியாகவும். அவரது புதிய வீடு 7,302 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. கடற்கரை அருகே இருக்கும் இந்த வீட்டில் 6 கார் பார்க்கிங் வசதி உள்ளது. நேற்று பதிவு செய்யப்பட்ட இந்த சொத்துக்கு 3. 91 கோடி முத்திரை வரியும் ரூ. 30 ஆயிரம் பதிவு கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. கிருத்தி சனோன் பெண் என்பதால் ஒரு சதவீதம் வரி தள்ளுபடி கிடைத்துள்ளது.