ஆஸ்கர் விருது வென்ற நடிகர் குடும்பத்தினருடன் மர்ம மரணம்
ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் 2 ஆஸ்கர் விருதுகள், 4 கோல்டன் குளோப் விருதுகள், 2 பிரிடீஷ் அகாதெமி விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.;
ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95). சூப்பர்மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். 1930 இல் பிறந்த ஜீன் ஹேக்மேன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.ஆஸ்கார் விருதுக்கு இவரது பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தி பிரெஞ்சு கனெக்சன் உள்ளிட்ட படங்களுக்காக ஆஸ்கார் விருதை தட்டிச்சென்றார். அன்பர்கிவனில், லிட்டில் பில் டாகெட்டாக நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் ஆஸ்கர் வென்றுள்ளார்.இவர் 4 கோல்டன் குளோப் விருதுகள், 2 பிரிடீஷ் அகாதெமி விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூ மெக்சிகோ மாகாணத்தில் தனது மனைவி பெட்ஸி அரகாவா (63) உடன் வசித்து வந்தார். இந்நிலையில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜீன் ஜேக்மேன் வீடு நீண்ட நேரமாக பூட்டியே கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.தகவலறிந்த போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டிக் கிடந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு ஜீன், அவரது மனைவி அரகாவா ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்களின் செல்லப் பிராணியான நாயும் செத்துக் கிடந்தது.
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.