''பெஸ்ட் ஆப் தி பெஸ்ட்'' படத்தில் இணைந்த இளம் நடிகைகள்

இந்த நகைச்சுவைத் திரைப்படத்தை லீனா கான் இயக்குகிறார்.;

Update:2025-07-19 18:23 IST

சென்னை,

''நெவர் ஹேவ் ஐ எவர் பிரேக் அவுட்'' நட்சத்திரம் மைத்ரேயி ராமகிருஷ்ணன் மற்றும் ''எவ்ரிதிங் டு மீ'' புகழ் பிரியங்கா கேடியா ஆகியோர் ''பெஸ்ட் ஆப் தி பெஸ்ட்''ல் இணைந்திருக்கிறார்கள்.

நெட்பிளிக்ஸில் வரவிருக்கும் பாலிவுட் படமான இதில் ஹசன் மின்ஹாஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நகைச்சுவைத் திரைப்படத்தை லீனா கான் இயக்குகிறார்.

இது தொடர்பாக மைத்ரேயி ராமகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவில், "என் உடல் புண்பட்டிருக்கிறது, ஆனால் என் இதயம் மகிழ்ச்சியில் நிரம்பியுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்