''தி ராஜாசாப்'' - பிரபாஸுடன் தனக்கு பாடல் இருப்பதை உறுதிப்படுத்திய மாளவிகா மோகனன்
இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.;
சென்னை,
நடிகை மாளவிகா மோகனன், பிரபாஸின் "தி ராஜா சாப்" என்ற திகில் நகைச்சுவை படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வரும் இந்தப் படம், வருகிற டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசரில் கவனத்தை ஈர்த்தது மாளவிகாதான். பிரபாஸுடனான அவரது கவர்ச்சி மற்றும் கெமிஸ்ட்ரி மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில், டுவிட்டரில் ரசிகர் ஒருவர் அவரிடம், பிரபாஸும் நீங்களும் இடம்பெறும் மாஸ் பாடல் இருக்குமா என்று கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன் ''நிச்சயமாக" என பதிலளித்தார்.