விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ் படத்திற்கு மலையாள இசையமைப்பாளர்?

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கெரியரில் முதல்முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.;

Update:2025-10-12 08:15 IST

சென்னை,

ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கெரியரில் முதல்முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்டோ சேவியர், பிரமயுகம், டர்போ மற்றும் சூக்சமதர்ஷினி போன்ற படங்களுக்கு பெயர் பெற்றவர்.

இது உண்மையாகும் பட்சத்தில் அவர் இசையமைக்கும் முதல் தெலுங்கு படமாக இது இருக்கும். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்