சம்பளம் குறித்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்த மமிதா பைஜு

மமிதா தனது சம்பளத்தை உயர்த்தியதாகவும் , ராஷ்மிகாவை விட அதிகமாக கேட்பதாகவும் கூறப்பட்டது.;

Update:2025-10-27 09:42 IST

சென்னை,

"பிரேமலு" படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை மமிதா பைஜு, சமீபத்தில் வெளியான "டியூட்" படத்தின் வெற்றியின் மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார். இதில் அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும், இவர் விஜய்யின் “ஜன நாயகன்” உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், மமிதா தனது சம்பளத்தை உயர்த்தியதாகவும் , ராஷ்மிகாவை விட அதிகமாக கேட்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதற்கு மமிதா பைஜு பதிலளித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் இருக்கும் மமிதா, இதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறினார். தான் இவ்வளவு அதிக சம்பளத்தை ஒருபோதும் கேட்கவில்லை என்றும், தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய உண்மையான சம்பளம் தெரியும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்