''மனுஷி'' பட வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
''மனுஷி'' படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ''மனுஷி'' படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்ட்ரியா நடிப்பில் உருவான 'மனுஷி' படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கவும், மாற்றி அமைக்கவும், வசனங்களை நீக்கி 2 வாரத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்புமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மனுஷி' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி தயாரிப்பாளர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.