மாரி செல்வராஜ் - தனுஷ் இணையும் வரலாற்று படம்.. புதிய போஸ்டர் வெளியீடு

மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.;

Update:2025-04-09 21:55 IST

சென்னை,

'பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை' போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த நிலையில், இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'D56' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ், ''இது தான் என்னுடைய கனவு படம்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தனுஷ் 'இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மெயின்' படங்களில் நடித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்