மோகன்லாலின் "ஹிருதயப்பூர்வம்" டீசர் வெளியீடு

மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் ‘ஹருதயப்பூர்வம்’ படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-07-19 20:13 IST

சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் 'ஹருதயப்பூர்வம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.இப்படத்தில் சங்கீதா, சித்திக், சங்கீத் பிரதாப், நிஷான், லாலு அலெக்ஸ், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அகில் சத்யன் வசனம் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

இந்த நிலையில், 'ஹருதயப்பூர்வம்' படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டீசர் காட்சியில் ஒருவர், "மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர் பகத் பாசில்தான். என்ன ஒரு நடிகர்" என மோகன்லாலிடம் சொல்கிறார். அதற்கு மோகன்லால், "ஆனால், இன்னும் மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள்" என்கிறார். அதற்கு, 'இல்லை. பகத் மட்டும்தான்" என அவர் சொல்ல, நகைச்சுவையாக மோகன்லால் அந்தக் கதாபாத்திரத்தைக் கடந்து செல்கிறார். இது ரசிகர்களிடம் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. மோகன்லாலின்'ஹருதயப்பூர்வம்' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்