நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் (30.05.2025)

மே 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;

Update:2025-05-29 08:15 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் வருகிற நாளை மே 30-ந் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

"கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்"

ஜோனாதன் என்ட்விஸ்டல் இயக்கத்தில் ஜாக்கி சான் நடித்துள்ள படம் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்'. பென் வாங் லி பாங் என்பவர் புதிய மாணவராக நடிக்கிறார். இதில் ஜாக்கி சான், கராத்தே கிட் படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, தமிழிலும் நாளை வெளியாக உள்ளது.

"ஜின்- தி பெட்"

டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்துள்ள படம் 'ஜின் தி பெட்'. இதில் பவ்யா திரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாகக் கொண்டு திகில், ஆக்சன், நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

"தி வெர்டிக்ட்"

அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'தி வெர்டிக்ட்'. இதில் ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையாக உருவாகியுள்ளது.

"மனிதர்கள்"

அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மனிதர்கள்'. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. தார்த்த பாணியில் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இதில் பெண் காதபாத்திரமே கிடையாது.

"ராஜபுத்திரன்"

மகா கந்தன் எழுதி இயக்கியுள்ள படம் 'ராஜபுத்திரன்'. இதில் பிரபு மற்றும் வெற்றி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமத்துக் கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

"ஆண்டவன்"

வில்லியம் பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வி.வில்லி திருக்கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆண்டவன்'. கே.பாக்யராஜ், டிஜிட்டல் மகேஷ் லீட்ரோலில் நடித்திருக்கும் திரைப்படம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்