சாக்சி மடோல்கரின் ’மௌக்லி 2025’ - டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2025-11-08 19:03 IST

சென்னை,

இளம் ஹீரோ ரோஷன் கனகலா, பபிள்கம் படத்தின் வெற்றிகரமான அறிமுகத்திற்குப் பிறகு, தேசிய விருது பெற்ற கலர் போட்டோ புகழ் சந்தீப் ராஜ் இயக்கிய 'மௌக்லி 2025' படத்தில் நடித்துள்ளார்.

பீப்பிள் மீடியா பேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் முதல் பாடலான 'சயாரே' வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசர் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது.

சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்