‘மிடில் கிளாஸ்' படத்தில் விஜயலட்சுமியிடம் அடி வாங்கிய முனீஷ்காந்த்

முனீஷ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.;

Update:2025-11-08 09:46 IST

தேவ், கே.வி.துரை தயாரித்து கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்' படம் விரைவில் திரைக்கு வருகிறது.

‘சென்னை-28', ‘அஞ்சாதே', ‘சரோஜா', ‘கற்றது களவு', ‘கசடதபற' படங்களில் நடித்த விஜயலட்சுமி, சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எப்போதுமே நான் கெத்து காட்டியதே கிடையாது. கதாபாத்திரம் பிடித்துப்போனால், கதைக்காக எப்படியும் நடிப்பேன். முனீஷ்காந்துடன் இணைந்து நடித்தது புதிய அனுபவம். படப்பிடிப்பின்போது வீட்டுக்குள் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில், நான் வீசி எறியும் பொருட்கள் அவரை தாக்கியபோதும், ‘இன்னும் அடிங்கள்' என்று அவர் கூறி ஜாலியாக அடிகளை வாங்கிக்கொண்டார். நல்ல நடிகரான அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி'' என்றார்.

முனீஷ்காந்த் கூறும்போது, ‘‘பெரிய படங்களில் ஹீரோயினாக நடித்த விஜயலட்சுமி எனக்கு ஜோடியாக நடிக்க வருகிறார் என்றதும் எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. ஆனாலும் கதைக்காக எந்த பந்தாவும் இல்லாமல் நடித்து கொடுத்தார்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்