ரிலீசுக்கு முன்பே படத்தின் கதையை சொன்ன மிஷ்கின்

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து ’டிரெயின்’ என்ற படத்தை மிஷ்கின் இயக்கி இருக்கிறார்.;

Update:2025-05-13 09:15 IST

சென்னை,

தங்களின் படம் ரிலீஸ் ஆகும்போது, கதை பற்றி பெரும்பாலான இயக்குனர்கள் வெளியே எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், இயக்குனர் மிஷ்கின் தான் இயக்கி இருக்கும் 'டிரெயின்' படத்தின் கதை இதுதான் என்று ஒரு நிகழ்ச்சி மேடையில் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து 'டிரெயின்' என்ற படத்தை மிஷ்கின் இயக்கி இருக்கிறார். சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய 'டிரெயின்' படம் முழுக்க முழுக்க ரெயில் பயணத்தை பற்றிய கதை என்றும், ஒரு ராட்சத புழு எப்படி தன்னோட பிள்ளைகளை சுமந்துகொண்டு தவழ்ந்து தவழ்ந்து போய் பத்திரமா வெளியே விடுகிறதோ, அதே மாதிரிதான் டிரெயின் படமும் என்றும் சொல்லி உள்ளார்.

வாழவே விருப்பமில்லாத கதாநாயகன், இறப்பை நோக்கி பயணப்பட்டுக்கொண்டு இருக்கையில், அந்த ரெயில் பயணம் அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் படத்துடைய ஒன்லைன் என்று கூறினார்.

இதை கேட்ட ரசிகர்கள் மிஷ்கின் எப்பவுமே தைரியமாக இருக்கும் இயக்குனர் எனவும், இந்த படம் நிச்சயமாக பீல் குட் படமாக புதுமையாக இருக்கும் எனவும் புகழ்ந்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்