பாலைய்யாவின் 111வது படம் பூஜையுடன் துவக்கம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள 111வது படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.;
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா(பாலையா). இவரின் ‘அகண்டா 2’ படம் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. நடிகரும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினருமான நந்தமுரி பாலகிருஷ்ணா ‘பத்ம பூஷன்’ விருதை சமீபத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாலகிருஷ்ணா – கோபிசந்த் மாலினேனி இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விருத்தி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது.
பாலகிருஷ்ணா படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக அரவிந்த் எஸ் காஷ்யப் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் பணிகள் மற்றும் படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு அனைத்தும் முடிவடைந்துவிட்டன.
‘அகண்டா 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் முடிவடைந்தவுடன், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.