புதிய வீடு... காவலாளியின் கனவை நிறைவேற்றிய நடிகர் பாலா

புதிய வீடு கட்டிக்கொடுத்து காவலாளியின் கனவை நடிகர் பாலா நிறைவேற்றியுள்ளார்.

Update: 2024-05-26 10:58 GMT

சென்னை,

சின்னத்திரையில் நகைச்சுவை கலைஞராக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலா. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். மேலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.

இதனிடையே நடிகர் பாலா பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். மருத்துவமனை இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, ஏழை பெண்களுக்கு ஆட்டோ, வறுமையில் வாடும் இளைஞருக்கு பைக் என தனது சொந்த செலவில் பாலா பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், காவலாளியாக பணிபுரியும் முதியவருக்கு நடிகர் பாலா புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார். தனது வீட்டின் அருகே விளையாட்டு அரங்கின் காவலாளியாக பணிபுரியும் முதியவரின் ஆசையை தனது சொந்த பணத்தில் நிறைவேற்றி, அந்த காவலாளியின் 68-வது பிறந்த நாளுக்கு புதிய வீட்டை பரிசாக அளித்து மகிழ்ந்துள்ளார்.

மேலும் புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த நடிகர் ராகவா லாரன்ஸ், புதிய வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கேக் வெட்டி முதியவரின் பிறந்தநாளை அவர்கள் கொண்டாடினர். இது தொடர்பாக நடிகர் பாலா பகிர்ந்துள்ள நெகிழ்ச்சிகரமான வீடியோ, பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்