9 படங்களில் 2 மட்டுமே வெற்றி...புகைப்படத்தில் உள்ள அந்த நடிகை யார் தெரியுமா?
தமிழில் இவர் சிம்பு, ஜெயம் ரவி போன்ற ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.;
சென்னை,
இவர் கதாநாயகியாக அறிமுகமாகி சுமார் எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த 8 ஆண்டுகளில், அவர் 9 படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே பிளாக்பஸ்டர் ஹிட், மற்றொன்று சராசரி. மற்ற படங்கள் அனைத்தும் சாதாரணமானவை.
டைகர் ஷெராப், அக்கினேனி அகில், நாக சைதன்யா, ராம் பொதினேனி, சிம்பு, ஜெயம் ரவி போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் படங்களில் நடித்திருந்தாலும், இந்த நடிகைக்கு பாக்ஸ் ஆபீஸ் ரீதியான வெற்றி கிடைக்கவில்லை.
இருப்பினும், இவரின் மதிப்பு சிறிதும் குறையவில்லை. இவர் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் தனது நடிப்புக்கு நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளார். சமீபத்தில், இவர் ஒரு நட்சத்திர ஹீரோ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் சராசரியான முடிவுகளையே சந்தித்தது. நாம் யாரைப் பத்திப் பேசுறோம்? ஆமா, அவர் வேறு யாருமில்லை, ஹரி ஹர வீரமல்லு பட கதாநாயகி நிதி அகர்வால்தான்.
நேற்று 32 வயதை எட்டிய நடிகை நிதி அகர்வால், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து ஏராளமான வாழ்த்துக்களைப் பெற்றார். அவரது அம்மா இந்து அகர்வால் அமன், இன்ஸ்டாகிராமில் நிதியின் குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறினார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. படத்தில், நிதி தொப்பியுடன் ஒரு கருப்பு நிற ஆடை அணிந்துள்ளார்.
நிதி அகர்வால் தற்போது ''தி ராஜா சாப்'' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் மற்ற கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.