'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை?
'ஜெயிலர் 2' படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது;
சென்னை,
"ஜெயிலர்" படத்தில் தமன்னா நடித்த ’காவலா’ சிறப்புப் பாடல் இந்தியா முழுவதும் பிரபலமானது. படத்தின் வெற்றிக்கு இப்பாடல் முக்கிய பங்கு வகித்தது.
இப்போது, அப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும், ஒரு சிறப்பு பாடலை படக்குழு வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
அந்த பாடலில் எந்த நடிகை நடனமாட இருக்கிறார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அந்த சிறப்பு பாடலில் நோரா பதேஹி நடனமாடுவதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அதற்கான படப்பிடிப்பையும் ஆவர் இன்று சென்னையில் துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நோரா பதேஹி, இதற்கு முன்பு பாகுபலி, ஊபிரி மற்றும் கிக் 2 உள்ளிட்ட பல பாலிவுட் மற்றும் தெலுங்கு பட பாடல்களில் நடனமாடியுள்ளார்.
"ஜெயிலர் 2" ஜெய்லரின் தொடர்ச்சியாகும். இதை அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.