காதலை பற்றிய தனது கருத்தை வெளிப்படையாக சொன்ன கிரித்தி சனோன்
கிரித்தி சனோன் கடைசியாக தனுஷுக்கு ஜோடியாக “தேரே இஷ்க் மே” படத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கிரித்தி சனோன், சமீபத்தில் காதலை பற்றிய தனது கருத்தை வெளிப்படையாகப் பேசினார். அவர் பேசுகையில்,
"எனக்கு உண்மையிலேயே காதல் மீது நம்பிக்கை உள்ளது. எல்லோருக்கும் அது தேவை. காதல் என்றால் ரொமான்ஸ் மட்டுமில்லை. எல்லாமே அதுதான் ’ என்றார்.
கிரித்தி சனோன் கடைசியாக தனுஷுக்கு ஜோடியாக “தேரே இஷ்க் மே” படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. அதுமட்டுமில்லாமல் இப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்பியது.